Sunday, May 24, 2015

CHAR DHAM TRIP 2015


Is CHAR DHAM Trip Spritual ? Fun ? Entertainment ? Relaxation ? Long Drives ? Yes.. Everything.
Friends I wanted to write a blog in my mother tongue and below is an attempt to it. Soon when time permits will get the English version of it, until then enjoy the pictures and see the tour plan at the bottom of this page.   Others who could read the below, kindly share your thoughts.
அனைவர்க்கும் வணக்கம்

பள்ளி பருவத்திற்கு பிறகு எழுத போகும் முதல் தமிழ் பதிப்பு. சொற் பிழை மற்றும் இலக்கணபிழை இருப்பின் தயவு கூர்ந்து மன்னிக்கவும்

2011 ஆம் ஆண்டு முதல் முறையாக வட இந்திய சுற்றுலா சென்றேன்.  முக்கிய இடங்களாக கேதார் மற்றும் பத்திரினாத் பற்றி சொல்ல வேண்டும். பத்ரினாத்தில் மூதாதயர்களுக்கு தர்ப்பனம் இத்தியாதிகள். சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது மணா எனும் ஊர். திபத்திர்க்கு முன்னால் உள்ள கடைசி இந்திய கிராமம். இங்கு தான் வயாசர் குகை மற்றும் நாட்டின் கடைசி டீ கடை உள்ளது. நேரமின்மையால் செல்ல முடியவில்லை.

கேதார் - சிவ தலம். அருமையான ஊர். குடும்பத்துடன் குதிரையில் பயணித்த 16 கி.மீ.  அனுபவம் சொல்லால் விவரிக்க இயலாது. 2013 இயற்கை பேரிடர்க்கு பின் மீண்டும் செல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

மீண்டும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன்.

2015 வருடம் நேபால் அல்லது சார் தாம் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் எங்கு செல்ல என்ற கேள்விக்கு பல நாட்களாகியும் விடை தெரியவில்லை. தை முடிந்தால்தான் வழி பிறக்கும் போலும். பிப். பிற்பாதியில் ஒர் இரவு உறக்கத்தில் ஒர் கனவு. நினைக்கும் இத்தருணம் கூட புல்லரிப்பு. வாழும் தெய்வம் என போற்றபடும் காஞ்சி பெரியவர் இரண்டே அடிகளில் ஆணையிட்டார் கங்கையில் குளி என்று.அத்துனை பாபங்கள் சுமந்தேனோ?

சார் தாம் என்று முடிவாகிவிட்டது. அடுத்த கேள்விகள் யார் யார்,எப்படி, எப்போழுது?

ஏப்ரலில்தான் அனைத்திற்கும் விடை கிடைத்து திட்டமிட முடிந்தது.

SkyLark Adventures, Kamal Jeeth Singh அறிமுகம் செய்தமைக்கு நண்பர் அருண் குருமூர்த்திக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அம்மா, நான், மனைவி காயத்ரி, மகன்கள் கௌதம் மற்றும் கிரிஷ் பயணத்திற்கு தயார். அனைவருக்கும் தேவையான உடமைகளை தேர்வு செய்து பயணத்துக்கு குருகிய நாட்களில் தயார் செய்த காயத்ரிக்கு பெரிய நன்றி.

பயண தேதி 8-05-2015 Chennai to New Delhi – Indigo Flight – Arrival 10.15 PM

ஹரித்வார் செல்லும் வழியில் பன்டிட் ஜிகா சாய் மற்றும் IIT Rourkey College மிக அருமை.

ஹரித்வார் 9-May-2015

சிவா (ஹர) மற்றும் விஷ்ணு (ஹரி) வை காண செல்லும் நுழைவாயில் என்றும் தேவபூமியின் நுழைவாயில் என்றும் அழைகின்றனர்.

முக்கியமான இடங்கள் மானசா தேவி, சண்டி தேவி, ஹர் கி பவுரி மற்றும் பல ஆசிரமங்கள்.

முக்கியமான நிகழ்வுகள் ; கங்கா ஸ்நாநம், கங்கா ஆர்த்தி, கங்கா பூஜை மற்றும் மூதாதயர்களுக்கு தர்பனம்.

 குளிர்ந்த கங்கையில் குளிக்கும் அனுபவமே அலாதிதான். கிரிஷ் கடைசி வரை இடுப்புக்கு மேல் குளிக்கவில்லை. மிகவும் குளிராக இருந்தது.

கங்கா பூஜை முடித்து பர்கொட் புறப்பட்டோம். செல்லும் வழியில் தாபா ஒண்றில் மதிய உணவு. பர்கொட் செல்ல இரண்டு வழிகள். ஒன்று விகாஸ் நகர் வழி. மிகவும் கிராமிய சூழல் வழியாக சில மலைகள் வழியாக யமுனா பாலத்தை கடந்தால்  தென்படுகிறது பர்கொட் 63 கி.மீ. என்கிற பலகை. மற்றொரு வழி முசோரி. இந்த வழி மிகவும் நேரம் எடுக்கும் என்பதால் முதல் வழியில் பயணித்தோம்.
வழி நெடுங்கிலும் நம்மை தொடர்ந்து வரும் நதி, ஒரு கணம் நாம் ஒரே இடத்தில் இருக்கிரோமோ என்கிற உணர்வு. ஆனால் கண் பார்வையில் மறையாமல் தொலைநொக்கு கருவில் பார்க்கும் உணர்வு நாம் மலையின் உச்சிக்கு செல்வதை உணர்த்துகிறது.

இனி நாம் பயணிக்கும் மலைகளை இமய மலையின் சிவாலிக் சிகரங்கள் என்று அழைக்கிறார்கள். இமய மலை என சொல்லும் பொழுது அதன் அருமையான நீர்வீழ்ச்சிகள், உயர்ந்த சிகரங்கள், ஊற்றுகள் நம்மை கொள்ளை கொள்ளும். மீண்டும் நம்மை நிஜ உலகுக்கு அழைத்து வருபவை அபாயகரமான பாதை மற்றும் வளைவுகள். வாகனங்கள் ஓட்ட தனி திறமை வேண்டும்.

இமைய மலைகளில் பல மறைந்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று இலாக்காமண்டல். பர்கொட்டிர்க்கு 26 கி.மீ. முன்னர் உள்ளது இலாக்காமண்டல்.
இலாக்காமண்டல்
இங்கு பல வண்ணங்களில் சிவ லிங்கங்கள் உள்ளன. இங்கு மகாவிஷ்ணு அவதாரங்கள்  பூஜித்த சிவலிங்கம், பாண்டவர்கள் பூஜித்த சிவலிங்கம், பார்வதி பூஜித்த சிவலிங்கம் உள்ளன. கோபரங்களில் மாட்டின் காலடி தென்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றுபடி பசு மாடு தினம் லிங்கத்திற்கு பால் அபிஷேகம்் செய்ததாம். கௌரவர்களிடமிருந்து இங்கு உள்ள ஒரு குகை வழியாகதான் பாண்டவர்கள் தப்பித்தனர் என்றும் ஒரு பதிவு உள்ளது. மேலும் இங்குள்ள க்ரனைட் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்யும் சமயம் எதிர் உள்ளவர் பிம்பம் தெரிகிறது. கோவிலினுள் பார்வதி தேவியின் கால் தடம், விநாயகர், கார்த்திகேயன், விஷ்ணு, அனுமன் மற்றும் சிவ பார்வதி விக்கிரகங்கள் உள்ளன.

மாலை 5 மணியளவில் பர்கொட் அடைந்தோம்.

பர்கொட் 9-May-2015

உணவு விஷயத்தில் கவனமாகத்தான் இருக்க வேண்டும். தாபா வில் உண்ட உணவு செரிமானமாகமல் பயணத்தின் இடையே வெளியே வந்தது. ஆகையால் சிறிது மாற்றம் செய்தோம் உணவு விஷையத்தில். காலை ரோட்டி, தால். மதியம் சாதம்,தால்,தயிர். இரவு  ரோட்டி, சப்ஜி. முடிந்தால் மதிய உணவு ஹோட்டலில் கட்டிக் கொண்டு செல்வது உத்தமம். பசி நேரத்தில் உண்ணவும், பசிக்காமல் இருக்க. வயிரு நிரம்ப சாப்பிட வேண்டாம். பின்னால் கஷ்டபட வேண்டும்.:-)

பர்கொட் - யமுனோத்ரி (3293 Mts) 10-May-2015
ஜய் யமுனா தி

26 கி.மீ. பயணித்து அடையும் இடம் ஃபூல் சட்டி. இங்கிருந்து 6 கி.மீ. மலை ஏற்றம். பின்ட்டு (முதுகில் சுமந்து செல்ல), குதிரை அல்லது டோலி யில் செல்லாம் நடக்க முடியாதவர்கள். குதிரை பயணம் - ரூ.1000 பின்ட்டு ரூ.1800 டோலி ரூ.4000. மிகவும் செங்குத்தான பாதை கஷ்டமாக இருந்தாலும் நடப்பது மேல். குதிரையில் ஏற்றம் பரவாயில்லை. இறக்கம் மிக கடினம்.
வழி நெடுங்கிலும் அருமையான நீருற்றுகள், அடம் பிடிக்கும் குதிரைகள், பிழைப்புகாக மனிதனை சுமக்கும் மனிதர்கள், சிகரங்களின் தோற்றம் வரிகளில் சொல்ல இயலாது.
இரண்டு மணி நேர குதிரை சவாரிக்கு பிறகு யமுனோத்ரி சென்றடைந்தோம். யமுனை யாருக்கும் அடங்காதவளாக மிகுந்த குளிருடன் வேகத்துடன் ஒடிக் கொண்டிருந்தாள். குளிக்கலாம் என்றால் கால் மட்டும் ஒரு கணம் வைக்க முடிந்தது. கால் மரத்து விட்டது.
HyperThermia வரும் குளிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டனர் கௌதம் மற்றும் காயத்ரி.
இமயத்தில் சூடான ஊற்றுகள் உண்டென்று கேள்வி பட்டதுண்டு. இங்கு அதை கண்டவுடன் தாவினேன் இன்பமாக.அதிசயமாகவும் இருந்தது. நித்ய கர்மாக்களை யமுனையில் செய்தது மனதுக்கு இதமாக இருந்தது. யமுனா தேவியை தரிசித்தபின்  மற்றுமொரு அதிசயம் காத்திருந்தது.
ஒரு சிறிய சூடான ஊற்று. இங்கு கம்பி கட்டி அதில் தண்ணீரில் மூழ்கும் அளவில்  துணி கட்டி இருக்கார்கள். அதில் மக்கள் தாங்கள் கொண்டு வந்த அரிசியை துணியில் கட்டி ஊற்றில் போடுகிறார்கள். சில நிமிடங்களில் அரிசி வெந்துவிடுகிறது. இயற்கையின் விந்தைகள் அற்புதம்.
மீண்டும் பயணித்தோம் கீழே இறங்க குதிரையில். எனக்கும், அம்மாவுக்கும் குதிரையா கழதையா எனுமளவுக்கு சண்டி குதிரைகள். மிகவும் சிரமபட்டோம்.  ஒரு வழியாக கீழே வந்தால் அம்மாவால் செரியாக பேச முடியவில்லை. காயத்ரி சமயோஜிதமாக களூகோஸ் கொடுத்தவுடன் சகஜ நிலைக்கு திரும்பினார். பின்பு மீண்டும் பர்கொட் திரும்பினோம்.

உத்தர்காசி 1352 Mts. 11-May-2015

பர்கொட்டிலிருந்து 100 கி.மீ. பயணித்த பிறகு உத்தர்காசி அடைந்தோம். இங்கு விஸ்வநாதர் ஆலையம் உள்ளது.

ஸ்கந்தபுராணப்படி கலியுகத்தில் சிவன் அவதரித்திர்கும் இடமாகும்.
ஸௌமிய வாராணாசி என்றும் இவ்வூர் அழைக்கபடுகிறது.
ஹோட்டல் சிவ லிங்கா நாங்கள் தங்கிய இடம். அறையின் மற்றொரு புறம் பாய்ந்து ஓடும் பாகீரதி. கொள்ளை அழகு. நிசப்தமாக 108 காயத்ரி மந்திரம் ஜபிக்க முடிந்தது. இந்த ஹோட்டலில் உப்புமா மிக அருமை .அடுத்த நாள் கங்கோத்ரி மறக்காமல் உப்புமா பொட்டலத்துடன்.

கங்கோத்ரி 3048 Mts 12-May-2015
ஜய் கங்கா மய்
செல்லும் இடமெங்கும் மலைகள், சுற்றிலும் மலைகள், அருமையான அனுபவம். ஒர் இடம் புகைப்படம் எடுக்க அருமையாக இருந்தது. இறங்கியவுடன்  அனுபவித்தது உறையவைக்கும் குளிர். நாங்கள் எதற்கும் தயாரகவே இருந்தோம்.  ஓட்டுனரிடம் வினவினோம் எவ்வளவு துலைவு என்று. மிகவும் பொறுமையாக கண்ணில் படும் இரண்டு மலைகளுக்கு பின்பறம் செல்ல வேண்டும் என்றார்.  செல்லும் வழியில் நெலாங் 20 கி.மீ. என்று இருந்தது. இது சீனா வின் எல்லை கிராமம். 

கங்கோத்ரி அடையும் போது மணி 11.00
கௌமுக் தான் கங்கையின் ஊற்றுகண். அதற்கு 16 கி.மீ. மலை ஏற்றம் ஆகையால்  அதை தவிர்த்தோம். கங்கை அழகை பார்த்த படி காலை  நீரி்ல் வைத்த கணம் கால் இடரி கீழே விழுமளவுக்கு மரத்துவிட்டது. நண்பர் அருண் 3 மணி நேரம் குளித்தார் நல்ல மதிய வேளையில். அவருடைய அனுபவம் என்னை மனதளவில் குளித்தே ஆகவேண்டும் என்று இருந்தேன். மூச்சை இழுத்து 3 முறை முழ்கினேன். உடல் முழுவதும் சிவந்துவிட்டது. அம்மா, காயத்ரி பயந்த நிலையில் கௌதம் உற்சாக படுத்தியது எதையோ சாதித்த உணர்வு.
கங்கை அம்மன் தரிசனம் முடிந்து கடை தெருவில் ஹோட்டல் ஒன்றில் அனைவரும் தோசை சாப்பிட்டோம். உத்தர்காசிக்கு பயணித்தோம்.
திரும்பும் வழியில் பல நல விரும்பிகளிடமிருந்து கைபேசி அழைப்புகள். ஆம் அன்றுதான் மீண்டும் பூகம்பம் நேபாளத்தில். எல்லோருடைய நல்லாசியுடன் எங்களுக்கு எந்த இயற்கை இடர்பாடுகளும் இல்லை.
அடுத்த நாள் திட்டபடி சோன்ப்ரயாக்  செல்ல ஆயத்தமானோம்.
சோன்ப்ரயாக் 1829 Mts 13-May-2015
8 மணி நேர பயணம். ஒட்டுனரின் சமயோஜிதம் மற்றும் தொழில் நேர்த்தி அபாரம். மலைகளுக்கு இடையே பாதை மாற்றி சில உத்தேச தடங்கல்களை சமாளித்தார். கன்சாலி வழியாக செல்வதென்பது மலை அடிவாரம் வரை சென்று மீண்டும் மலை ஏறவேண்டும்.  மழை வந்தால் மண் சரிவுகளில் சிக்க நேரிடும். மலைகளுக்கு இடையே உள்ள வழிகளில்  மலை உச்சியிலையே பயணித்து  கடுமழையில்   சீதாபூர் அடைந்தோம்.
கடும் குளிர், மழை 2013 அசம்பாவிதத்தை நினைவு கூர்ந்தது. அன்று இரவு சற்று பயமாகவே இருந்தது. எப்பொழுது கேதார் தரிசனமுடிந்து பாதுகாப்பான குப்த் காசி வருவோம் என்று இருந்தது.

கேதார்நாத் 3583 Mts 14-May-2015
ஜய் கேதார்நாத் ஜி
இந்த இடத்திலிருந்து கௌரிகுண்ட் 10 கி.மீ. நடந்து\குதிரை மூலம் கேதார் செல்வோர்காண வழி. 2013 க்கு முன்பு 14 கி.மீ. பாதை முற்றிலும் நாசமாகி இருந்து. தற்போது புதிய பாதை 23 கி.மீ. ஹெலிகாப்டரில் பயணித்த போது பழைய நினைவுகள் வந்து மறைந்தன.
ஹெலிகாப்டர் அனுபவும் மிகவும் பிரமாதமாய் இருந்தது. 6 நிமிட பயணத்தில் கேதார்நாத் கோவிலை அடைந்தோம். சுற்றிலும் உறை பனி சூழ வித்தியாசமான அனுபவம்.2011 பார்த்ததில் வேறு எதுவும் உருப்படியாக இல்லை கோவிலை தவிர. கோவிலை காப்பாற்றிய மிக பெரிய பாரையும் தெய்வமாக வணங்க படுகிறது.
பாண்டவர்கள் கௌரவர்களை வென்று பரிகாரம் தேட சிவனை தேடினார்கள். சிவன் தன்னை மாடாக உருஎடுத்து பூமிக்குள் புதைய எத்தனித்தார். அவருடைய உடல் ஐந்து இடங்களில் தென்பட்டது. பஞ்ச கேதார் எனபடுவது மாட்டின் கூனல் கேதார்நாத், கால்கள் துங்கநாத்,முகம் ருத்ரநாத், வயிற்று பகுதி மத்மகேஷ்வர்,தலை மற்றும் ஜடாமுடி கப்லேஷ்வர் ஆகும்.
குப்த காசியிலிருந்து உகிமத் எனும் இடத்திற்கு சென்றோம். இங்குதான் பனி படர்ந்த 6 மாதங்கள் பஞ்ச கேதார் மூர்த்திகளுக்கு பூஜை நடைபெறுகிறது.
சோப்டா 4000 Mts 14-May-2015
உகிமத்திலிருந்து நேராக சோப்டா எனும் மலை வாசத்திர்க்கு சென்றோம்.

இது இந்தியாவின் ஸவிசர்லாண்ட் என்கிறார்கள். அதிகம் மக்கள் புலம் பெயரவில்லை போலும். விறகுகள் எரித்து கொஞ்சம் குளிர் சமாளித்தோம். சாப்பாடு மிக அருமை. விஞ்ஞான உபகரநங்கள் இல்லாத இயற்கை தயாரிப்பிலான உணவு. நனறாக கழிந்தது இரவு.
அடுத்த நாள் புறப்பட்டோம் பத்ரிநாத்திற்கு.
பத்ரிநாத் 3100 Mts 15-May-2015
ஜய் பத்ரி விஷால்
பிபல்கோட்டி மற்றும் ஜோஷிமட் வழியாக பத்ரிநாத் செல்லவும். பி.கோ. தென் இந்திய உணவு கிடைக்கும். பிறகு ஜோஷிமட்டில் உள்ள நரஸிமரை வழிபடுங்கள் (108 திவ்ய தேசம்). வழியில் காணும் ஒவவொரு இடமும் 2013 இயற்கை பேரிடரை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. பாறைகள் அவ்வபொழுது உருண்டு வருவது இங்கு வாடிக்கை.

மிகவும் அபாயகரமாகவே இருந்து. மழை பெய்து நம் பதட்டத்தை அதிகரிக்கவே செய்தது. இங்கு நம் கண்ணில் தென்படும் நதி அலக்நந்தா. மிகுந்த வேகத்துடன் சமவெளியை நோக்கி பயணித்திருந்தது. நாமும் பயணித்தோம் உச்சியை நோக்கி.
ஒரு இடத்தில் இரு புறமும் பனி பாறைகளுக்கிடையே வாகனம் சென்றது.
கடும் குளிர் மற்றும் சாரலுக்கிடையே பத்ரிநாத் சென்றடைந்தோம்.
பத்ரிநாத் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த கோவிலில் பத்ரி நாராயணன், நரன், குபேரன், நாரதர் மற்றும் உத்தவர் மூர்த்திகள் உள்ளன.
ஆதி சங்கரரால் நிறுவ பெற்று கனக்பால் வம்சத்தால் பேனபட்ட தலம். கேரள நம்பூதிரிகள் தான் இங்கு குருமார்கள். தபத்குண்ட் எனப்படுவது சூடான நீருற்று. சில மீட்டர் இடைவெளியில் குளிர்ந்த அலக்நந்தா நதி.
இங்கு வைணவர்கள் பிண்டபிரதானம் செய்வர். நாங்கள் தம்பதி பூஜை, பித்ரு தர்பனம் மற்றும் யாத்திரா யஞ்ம் செய்தோம். ரூ.1600 சம்பாவனை.
சுமார் 3 கி.மீ. உள்ளது மணா நம் நாட்டின் எல்லை கிராமம். இங்கு வ்யாசர் குகை உள்ளது. இங்கு அலக்நந்தா நதியில் சங்கமமாகும் ஸரஸ்வதி நதியை காணலாம். பனி பாறை மிகுதியால் பாதை மூடபட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு பிகு திறப்பார்களாம். இந்த முறையும் மணா போக முடியாமல் திரும்பினோம்.

நல்லபடியாக சார்தாம் முடிந்து தெற்கே திரும்பலானோம். வரும் வழியில் பல ப்ரையாகைகள் வழியாக ருத்திர ப்ரயாக் அடைந்தோம்.

ருத்ரப்ரயாக் 16-May-2015

அலக்நந்தாவும் தௌலிகங்கா சங்கமிக்கும் இடம் விஷ்ணுப்ரயாக்,
அலக்நந்தாவும் நந்தாகினி  சங்கமிக்கும் இடம் நந்தப்ரயாக், 
அலக்நந்தாவும் பிண்டார் சங்கமிக்கும் இடம் கர்ணப்ரயாக்,
அலக்நந்தாவும் கேதாரிலிருந்து வரும் மந்தாகினி சங்கமிக்கும் இடம் ருத்ரப்ரயாக். 
அலக்நந்தா -  பாகீரத் கராக் மற்றும் சடோபந்த் பனி பாறையிலிருந்து உருவாவது அலக்நந்தா, கௌமுகிலிருந்து வரும் பாகீரதி சங்மிக்கும் இடம் தேவப்ரயாக்.
ருத்ரப்ரயாகில் ஒரு நடுத்தர ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள் அமாவாசை ஹரித்வார் புறப்பட்டோம்.
ஹரித்வார் 17-May-2015

இரு நதிகள் சங்கமிக்கும் தேவப்ரயா்க் கண் கொள்ளா காட்சி. இங்கிருந்து தான் கங்கை என பெயரிட பட்டு ஒரே நதியாக தெற்க்கு நோக்கி பாய்கிறது
அமாவசை தர்ப்பனம் தேவப்ரயாகில். பித்ருக்கள் சந்தோஷபட்டிருப்பர் என்று நினைக்கிறேன். ரிஷிகேஷ் செல்லும் வழியில் வசிஷ்ட்டு குகை ஆசிரமத்தை கண்டோம். ராஃட்டிங் என்னும் படகு சவாரியில் 10 கி.மீ. கங்கையில் பயணித்து ரிஷிகேஷ் அடைந்தோம்.
ரிஷிகேஷில் 1 மணி நேரம் ஆனந்த குளியலிட்டோம் கங்கையில். இரவு ஹரித்வாரில் தங்கினோம். மறுநாள் அமாவாசை இருந்ததினால் மீண்டும் ஒரு முறை கங்கா ஸ்நானம், தர்ப்பனம் இத்யாதிகள். மீண்டும்  டில்லி புறப்பட்டு போக்குவரத்து இடையூரால் விமானத்தை தவறவிட்டோம்.
டில்லி 18-May-2015
டில்லியில் ஒரு நாள் தங்கி மறுநாள் இரவு  பெங்களூர் வந்தடைந்தோம்.
பெங்களூர்- சென்னை 19-May-2015
நள்ளிறவு சென்னை பேருந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்தோம்.

Day
Date
Places visited
Hotel
Place
Day 0
09-May
Haridwar  3 AM TO 8 AM
Chanakya
Haridwar
Day 1
09-May
Haridwar - Barkot
Chauhan Anex
Barkot
Day 2
10-May
Barkot - Yamunothri - Barkot
Chauhan Anex
Barkot
Day 3
11-May
Barkot - Uttarkashi
Hotel Shivlinga
UttarKashi
Day 4
12-May
Uttarkashi - Gangothri - Uttarkashi
Hotel Shivlinga
UttarKashi
Day 5
13-May
Uttarkashi -Sonprayag - Sitapur
Hotel Jagatraj
Sitapur
Day 6
14-May
Sitapur - Kedarnath -Ukhimath- Chopta
Mayadeep Resort
Chopta
Day 7
15-May
Chopta-Pipalkoti-Joshimutt-Badrinath
Hotel Charan Paaduka
Badrinath
Day 8
16-May
Badrinath - Rudraprayag
Hotel Tulsi
Rudraprayag
Day 9
17-May
Rudraprayag-Devaprayag-Rishikesh-Haridwar
Hotel Khanna Palace
Haridwar
Day 10
18-May
Haridwar - New Delhi
Hotel Horizon Palace
New Delhi
Day 11
19-May
New Delhi - Bengaluru - Chennai

 புகைபடங்கள்
Haridwar
On the way to Barkot
Yamuna Bridge
On the way to Barkot
Garwal Roads
Footprints of a Cow
Granite Lingam - Reflecting the object before it
Shiva linga of Dredayuga
Shiva Linga installed by Yudhishtra
Yamunothri
Horse ride from Phool Chatti
Springs enroute to Yamunothri
Snow mountains surrounding Yamuna
Hot Spring in Yamunothri - Rice being cooked
Uttarkashi
Banks of River Bhagirathi - View from the Hotel room
Gangothri glacier flow between mountains
Snow Mountain View from Gangothri
Gangothri
Enroute to Uttarkashi
Mountain View
Kedar Temple
Kedar
Kedar Mountains
Chopta Resort - Mayadeep
Mayadeep Resort
View from Chopta Hill top
View enroute to GuptKashi
Rockslides
Rockslides enroute to Badri
Joshimutt - Narasimha Temple
Badrinath Temple
Nar Mountain
Badri mountain
Snake eyed Rock
Spatika Linga at Badrinath
Confluence of Bhagirathi & Alaknanda - Devaprayag
Bhagirathi River
Rishikesh - at Rafting boat yard

3 comments:

  1. Very Nice Gowri....Thanks for narrating the experience by sharing with Snaps/titles...Felt like as if I travelled to these places....Stimulated to visit these places once in a lifetime

    ReplyDelete
  2. அற்புதமான பயணம் அற்புதமான வர்ணனை அற்புதமான அனுபவம் அழகான தமிழ்.கங்கை படிக்கும்போதே குளிர்கிறது. வெண்ணீறு ஊற்றறை படிக்கும்போது சுடுகிறது. குதிரையில் இறங்கிய சம்பவம் கூசுகிறது.உன்னிடம் இன்னும் நிறைய இருக்கின்றன எழுது. 75 வயதில் அம்மாவை உடன் அழைத்து சென்ற நீ கொடுத்து வைத்தவனா? உன் அம்மா கொடுத்து வைத்தவளா? இதையெல்லாம் பார்க்கும் கேட்கும் நான் கொடுத்து வைத்தவனா? தவிர்க்க இயலாமல் அத்திம்பேரின் நினைவு வந்து போகிறது.

    ReplyDelete
  3. ஒரு இனிமையான thrillingaana பயண அனுபவம். அனுபவப் பகிர்வுகள் நிச்சயமாக பிறருக்கு உதவும். புகைப்படங்கள் நிகழ்வுகளை கண் முன் நிறுத்துகின்றன.
    பயண அனுபவங்களை தமிழில் பதிவு செய்து பகிர்தமைக்கும் புகைப்படங்கள்ளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete